ஷாகிப் அல் ஹசன் மீதான் இரண்டு வருட தடையை தொடர்ந்து இந்திய தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக மஹ்மதுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், தன்னை சூதாட்டக்காரர் அணுகியதை ஐசிசியிடம் தெரிவிக்காததையடுத்து மூன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன, அனைத்தையும் விசாரணையில் இவர் ஏற்றதையடுத்து 2 ஆண்டுகள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார்.
அதாவது 2 ஆண்டுகள் இடைநிறுத்த தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது, முதல் ஓராண்டு முழுதுமாக எந்த கிரிக்கெட்டிலும் அவர் ஆட முடியாது, இந்த ஓராண்டில் அவரது நடத்தை ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை குழுவுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பார்த்த பிறகு ஓராண்டுடன் தடை முடிவடையலாம். ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரை இதன் பிறகு எப்படிக் கையாளும் என்று தெரியவில்லை.
காரணம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தையும் அவர் வீரர்கள் ஸ்ட்ரைக் மூலம் பகைத்துக் கொண்டுள்ளார், அதோடு வங்கதேச கிரிக்கெட் வாரியம் முறித்துக் கொண்ட செல்போன் நிறுவனத்துடன் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்து கொண்டும் அவர் வாரியத்தை வெறுப்பேற்றியுள்ளார்.
எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்க முயற்சி செய்தாலும் செய்ய பெரிய அளவில் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள இந்தியா வங்கதேச இடையேயான தொடருக்கான வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
அதன்படி டி.20 போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக மஹ்மதுல்லாஹ்வும், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மொஹ்மினுல் ஹக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.