இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 'தகவல் உரிமைச் சட்டம்' செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

tamilsolution_ad_alt




- நூருள் ஹுதா உமர் -

சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'தகவல் உரிமைச் சட்டம்' செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (05) காலை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 பேர் அளவில் இவ்வமர்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே, சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் நுருல் ஹூதா உமர், பிரதித் தலைவர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Theme images by suprun. Powered by Blogger.