இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களின் தகவல்கள் கோரல் !!

tamilsolution_ad_alt
வடக்கு கிழக்கிலுள்ள மூவின ஊடகவியலாளர்கள், அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய 'ஊடக விபரத் திரட்டு' (Media Directory) வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை சிலோன் மீடியா போரம் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான விபரங்கள் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடக நிறுவனங்ளில் முழு நேரமாகவும் மற்றும் பிராந்திய ரீதியில் பகுதி நேரமாகவும் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு இவ் ஊடக விபரத்திரட்டு மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தளங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் தங்களது கீழ்கோரப்படும் தகவல்களை உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முழுப் பெயர், விலாசம், பிறந்த திகதி, ஊடக பிரவேச ஆண்டு, கைபேசி, தொலைபேசி இல, வாட்ஸ்ஆப் இல, ஈமெயில், மாவட்டம், கடமையாற்றும் ஊடக நிறுவனம், காரியாலய ஊடகவியலாளரா அல்லது பிராந்திய ஊடகவியலாளாரா போன்ற தகவல்களை குறிப்பிட்டு பாஸ் போட் அளவான புகைப்படத்துடன் தாங்கள் ஒரு ஊடகவியலாளர் என உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஊடக நிறுவனத்தின் சேவைக்கால கடிதம் மற்றும் ஊடக அடையாள அட்டை என்பவற்றின் பிரதிகளை இணைத்து cmforum786@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் தங்களது பெறுமதி மிக்க ஒத்துழைப்பினை பெரிதும் மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

-நூருல் ஹுதா உமர்
Theme images by suprun. Powered by Blogger.