இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ‘‘கேன் வில்லியம்சனின் காயத்தை கண்காணித்து வருகிறோம். வங்காளதேசத்திற்கு எதிராக மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது எந்த வகையான காயத்தால் அவதிப்பட்டாரோ, தற்போதும் அதே காயத்தால் அவதிப்படுகிறார்’’ என பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து டி20 அணி
டிம் சௌதி(கேப்டன்), டிரெண்ட் போல்ட், டி கிராண்ட் ஹோம், லாக்கி ஃபெர்குசன், மார்டின் கப்டில், குஜ்ஜெலின், டேரைல் மிட்செல், முன்ரோ, ஜிம்மி நீஷாம், மிட்செல் சாண்ட்னெர், சேஃபெர்ட், இஷ் சோதி, டெய்லர், டிக்னெர்.