தமிழ் நாடு திருச்சியில் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி நடைபெற்றுவருகின்றன.
நேற்று முதல் 22 மணிநேரமாக சவாலுக்கு மத்தியில் போராட்டமாக மீட்புப்பணிகுழு .
நேற்று சிறுவன் விழுந்த போது 30 அடியில் சிக்குண்டவன் தற்போது 80 அடியில் உள்ளதாக தகவல் .
நிலத்திற்கு மேல் இருந்து சிறுவனுக்கு ஒட்சிசன் பாய்ச்சப்பட்டு வருகின்றன .நிலத்திற்கு மேல் இருந்து நவீன கமெரா மூலமாக சிறுவனை பார்க்கக் கூடியதாக உள்ளது .
தற்போது சிறுவனின் கையில் நவீன கை போன்ற கருவி மூலமாக கயிறு கட்டிவிட்டதாக தகவல் வந்துள்ளது .தரையில் இருந்து நவீன கருவி மூலமாக கமெரா மூலமாக பார்வையிட்டு செய்து வருகின்றார்கள்.
தற்போது சிறுவனை சுற்றி 80 அடியில் நிலத்தின் கீழ் உள்ள நீர் மற்றும் கசிவுகள் மூடி விடலாம் என்ற அச்சம் ஒரு புறம் .
ஒட்டுமொத்த தமிழ் நாடு சோகமயம் .பதற்றம் .
போர்க்கால சூழல் போன்று அரசு நடவடிக்கை !..
இன்னும் சொற்ப நேரத்தில் சிறுவனை மீட்க கூடியதாக உள்ளது .
யா அல்லாஹ் சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட உதவி செய்வாயாக !!!!
மதங்கள் கடந்து பிரார்த்தனை செய்வோம் !.
கனத்த இதயத்துடன்!
இன்னும் ஒரு மணிநேரத்தில் சிறுவன் தூக்கப்படுகின்றான்.