இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பாடசாலைக்கு பர்தா அணிந்து வர முடியாது, பூண்டுலோயா தமிழ் ம.வி.யில் கடும் எதிர்ப்பு

tamilsolution_ad_alt
அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண­விகள் பாட­சா­லைக்கு பர்தா அணிந்து வரக்­கூ­டாது என பெற்­றோரும் பழைய மாண­வர்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லைமை தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் எடுப்­ப­தற்­கான கூட்­ட­மொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாட­சா­லையில் இடம்­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் பழைய மாணவர் சங்க பிர­தி­நி­திகள், பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்க பிர­தி­நி­திகள், பெற்றோர் தரப்பில் பிர­தி­நி­திகள், பூண்­டு­லோயா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, நுவ­ரெ­லியா பிராந்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், வலயக் கல்வி அதி­கா­ரிகள், பாட­சாலை அதிபர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் தரப்பில் கல்­வி­ப­யிலும் மாண­வி­களின் பெற்­றோ­ரல்­லாத 7 பேரும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் 3 பேரும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். நடை­பெற்ற கூட்­டத்தில் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில் வலயக் கல்விப் பணிப்­பா­ள­ருடன் பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்தின் ஆறு பேர் கலந்­து­ரை­யாடி இது தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­லய அதிபர் ஸ்ரீவேணுகோபால சர்­மாவை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். பாட­சாலை ஒரு கலவன் பாட­சாலை. 1400 மாணவ மாண­விகள் இங்கு பயில்­கி­றார்கள். இவர்­களில் 126 பேர் முஸ்லிம் மாணவ, மாண­விகள். 126 பேரில் 69 பேர் மாண­விகள். இவர்களில் 35 பேர் பர்தா அணிந்து வரு­கி­றார்கள். இங்கு தமிழ் மாண­வர்­களே பெரும்­பான்­மை­யா­ன­வர்கள்.

இப்­பா­ட­சாலை முஸ்லிம் மாண­விகள் பர்தா அணிந்து வரு­வதை பெற்றோர் விரும்­ப­வில்லை எதிர்க்­கி­றார்கள்.

இது­வரை காலம் பர்­தா­வுக்கு எதிர்ப்பு இருக்­க­வில்லை. ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­த­லை­ய­டுத்தே இந்­நி­லைமை உரு­வா­கி­யுள்­ளது. தமிழ் மாண­விகள் போன்று முஸ்லிம் மாணவிகள் உடையணிய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகிறார்கள்.

வலயக் கல்வித் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

Kumbukkandura News
Theme images by suprun. Powered by Blogger.