பிரேசிலில் சாலை விபத்தில் சிக்க இருந்த அரியவகையைச் சேர்ந்த ஸ்லாத் என்ற விலங்கு காப்பாற்றப்பட்டது.
உலகின் மிகவும் சோம்பேறியான உயிரினம் என்று பெயரெடுத்த ஸ்லாத் என்ற விலங்கு பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
வரைமுறையற்ற வேட்டையால் மிகவும் அரிதாகிப் போன இந்த அப்பாவி உயிரினம் மிகவும் மெதுவாக நடந்து அல்லது ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது.
இந்நிலையில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படும் சாலை ஒன்றில் ஸ்லாத் ஒன்று ஊர்ந்து செல்வதைக் கவனித்த வாகன ஓட்டுநர் ஒருவர், விபத்தில் சிக்க இருந்த அந்த விலங்கை மீட்டு அருகில் இருந்த மரத்தில் சேர்ப்பித்தார்.
அதன் பின்னர் அவருக்கு நன்றி கூறும் விதமாக ஸ்லாத்தும் திரும்பிப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.