தாய்லாந்தில் விமான நிலையம் அருகே உள்ள மாய்காவோ என்ற கடற்கரை பகுதியில் செல்பி எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
மாய்காவோ என்ற கடற்கரை பகுதி சிறப்பு வாய்ந்தது. காரணம் இதற்கு அருகிலேயே விமானம் நிலையம் உள்ளதால் இங்கிருந்து புறப்பட கூடிய விமானங்கள் கடற்கரை ஓரமாக கையைத் தொட்டுச் செல்லும் அளவிற்கு கடற்கரையை ஒட்டி பறக்கும்.
இவ்வாறு மிகவும் தாழ்வாக பறப்பதால் அந்த இடத்திலிருந்து செல்பி எடுத்துக் கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம்
செலுத்தி வருகின்றனர். விமானம் கிளம்பும் நேரம் பார்த்து அந்த இடத்தில் நின்று பெரும்பாலான மக்கள் செல்பி எடுப்பார்கள்.
செல்பி எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கும் போது அவர்களுக்கு சில சமயத்தில் காயம் ஏற்படுவது மட்டுமின்றி விமானியின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.