கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி, டுபாயில் மாகந்ரே மதூஷூடைய பிறந்தநாள் கொண்டாட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது, அதில் கலந்துக் கொண்டிருந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூக்கு 1000 கோடிக்கும் அதிக பொறுமதி கொண்ட பணம் மற்றும் சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வாழைத்தோட்ட பகுதியில் இம்மாதம் 5ம் திகதி கைது செய்யப்பட்ட, மதூஷூடைய நெருங்கிய உறவுக்காரர் ஒருவரான இந்திக என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுள் 15 பேர் இலங்கைக்கு இதுவரையில் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.