கடந்த 2 நாட்களில் இலங்கையில் விபத்துகளில் சிக்கிய 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 203 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த வருடத்தை விட 15 வீத அதிகரிப்பாகும்
வீதி விபத்துக்களில் சிக்கிய 113 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வருடத்தை விட இது 6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
வீடுகளில் இடம்பெற்ற அனர்த்தங்களால் 49 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகைக்கால விழாக்களை ஏற்பாடு செய்யும் பொது விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.