இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இன்று ஒரு வருடம் பூர்த்தியாகும் திகன தாக்குதலும், வரவு- செலவும்.

tamilsolution_ad_alt

திகன தாக்குதலுக்கு இன்றுடன்(மார்ச் 5ம் திகதி) ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில்
இன்று செவ்வாய்க்கிழமை வரவு செலவு அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இந்த வரவு செலவு அறிக்கையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஞ்சிய நட்டஈடு வழங்கப்படுமா என்ற கேள்வியோடு? நாம் என்ன செய்ய வேண்டும்? கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? என்று சிந்தித்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.


மிலேனியம் (2000) தொட்டு கடந்த வருடம் 2018 வரை இலங்கை முஸ்லிம் சமூக ஆங்காங்கே மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்றமை நாம் பலவீனமாவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. எம்மை பொருளாதாரம், அரசியல், உளவியல் ரீதியான , பலவீனப்படுத்தலுக்கான திட்டங்கள் திரைக்குப் பின்னால் அரங்கேற்றப்படுகிறது என்பதை ஞாபகப்படுத்தி நாம் பலம் பெறுவதற்காக ஒன்றுபடல் மிக அவசியமானது.


18 வருட கால எல்லைக்குள் நடைபெற்ற தாக்குதல்களில் திகன தாக்குதலே மிகம் பெரும் வடுவையும் , பொருள் அழிவையும் ஏற்படுத்தியதென்றால் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. சேதமாக்கப்பட்ட மொத்தச் சொத்துக்களின் பெருமானத்தை பலரும் பலவிதமாகக் குறிப்பிடுகின்றனர்.


297 வீடுகள், 223 கடைகள், 18 பள்ளிவாயல்கள், 65 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு உயிர்கள் (சகோதரர் அப்துல் பாசித், தெல்தொட்டை சதகதுல்லாஹ் மெளலவி) அத்துடன் காயப்பட்டவர்கள் என்று தொடரும் பட்டியலில், இறந்த உயிர்களுக்கு  நஷ்டஈடு மதிப்பிட முடியாது.எந்தத் தரப்பினர்களாக இருப்பினும் கூட.


நஷ்டஈடாக வீடொன்றிற்கு 50,000 ரூபாவும், கடையொன்றிற்கு 100,000 வழங்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக  1.5 கோடி மாத்திரமே நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட நட்ட ஈட்டிற்கும் அழிந்த சொத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் "யானைப் பசிக்கு சோளப் பொறி" வழங்கியதைப் போன்றுள்ளது. இந்த வரவு செலவிலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படுமா?! அல்லது நொட்டிச் சாட்டுக்களால் இழுத்தடிக்கப்படுமா?!


இலங்கையி கடந்த காலங்களில் மானிட அனர்த்தங்களினால் (Human Disaster) ஏற்பட்ட அழிவுகளுக்கும்  அரசு தரப்பால் வழங்கப்பட்ட நட்ட ஈடுகளுக்குமிடயே உள்ள வித்தியாசம் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டி தேவையுள்ளது. மானிட அனர்த்தங்களுக்கு பாதிக்கப்பட்ட இனமே உடனடியாக முன் வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது. ஆனால், அரசுக்கு அழுத்தம் செலுத்தி தமக்கானதைப் பெற்றுக் கொள்ள மக்களும் , மக்கள் பிரதிநிகளும் ஆர்வம் கரிசணை செலுத்துவதில் பலவீனமுள்ளது.


இலங்கையில் இயற்கை அனர்த்தங்களை (Natural Disaster) எதிர் கொள்வதற்கான திட்டமிடல் இருக்கும் நிலையில், மானுட அனர்த்தங்களுக்கு (Human Disaster) பல தடவைகள் நாடு முகங் கொடுத்தும் அதனை தடுப்பதற்கான (Prevention Plan) முறையான உள, அரசியல் ரீதியான தயார் நிலைகள் இல்லை என்பதுவே உண்மை. அழிவுகளின் அளவீடு இதற்குப் போதுமான சான்று.


நாட்டுப் பற்று என்ற போலிக் கோஷ்த்திலிருந்து வெளியேறி மானிடம், மனிதாபிமான வாழ வேண்டும் என்ற கோஷம் மேலோங்காத வரை இந்தப் பூமி அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற பெயருடன் யுக முடிவு வரை வாழும்.

A Raheem Akbar
மடவளை பஸார்
(Madawala News)

KUMBUKKANDURA NEWS
Theme images by suprun. Powered by Blogger.