நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலஙகை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் தானியார் பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் கயாமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
KBKNEWS 31 MARCH 2019
குறித்த விபத்தானது இன்று அதிகாலை சிலாபம், புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து துறையினருக்கு சொந்தமான பஸ் பங்கதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ் நிறுத்த வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுன் பின்புறமாக மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்ஸுன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்
எம் ஏ எம் ரினாஸ்
கும்புக்கந்துரை நியூஸ்