மக்காவின் வெற்றிக்குப் பின்னர் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒருவர் வருகை தந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை, எனக்கு இருக்க ஓர் இடமில்லை” என முறையிட்டு நின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள். “இதோ: இந்த இடத்தில் நீர் உமக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளும்” எனக் கூறினார்கள். கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏழை மனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்ப முனைந்தபோது மண்குழைத்துக் கொடுத்தார்கள் மன்பதையை வாழ்விக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.
சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. வீட்டிற்கு முகடு அமைத்திடும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். அது உயரமாக இருந்ததால் எட்டவில்லை.
இதனைக்கண்ட காத்தமுன்னபிய்யின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “நண்பரே! நான் கீழே அமர்ந்து கொள்கிறேன் நீர் என தோள்மீது ஏறி முகடு அமைத்துக்கொள்ளும்” என்றார்கள்.
அண்ணலாரின் மொழிகேட்டு அதிர்ந்து போன அத்தோழர், “என்ன தங்களின் புனிதமிகு தோள்களின் மீது ஏறியா நான் என வீட்டிற்கு முகடு அமைத்துக்கொள்வது? எனக்கு வீடே வேண்டாம்,” என அழுதவராகக் கூறலுற்றார்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரை சமாதானம் செய்து தம் புனித தோள்களில் ஏறி முகடு அமைத்துக் கொள்ள உதவினார்கள்.
அவரோ வேண்டா வெறுப்புடன் கண்ணீர் சிந்தியவாறு தோளின் மீதேறி முகடு அமைத்தார்.
உண்டா இப்படி ஒரு வரலாற்று நிகழ்ச்சி மற்றவர் வாழ்க்கையில்...?
நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றார்கள், ஆனால், தம் தொண்டனுக்குத் தோள் கொடுத்த தலைவர் உண்டா?
நன்றி - Women of Islam
நன்றி - Women of Islam
No comments
Thanks for reading….