வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சகல தரப்பினர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வீதி நெரிசல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
வாகன நெரிசல் காரணமாக தொழில் நிமித்தம் செல்கின்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் தேசிய வருமானத்தில் பல மில்லியன் ரூபா விரையம் ஏற்படுவதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் தெரிவித்தார்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை அழைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தேசிய திட்டமொன்றை தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளக்கூடிய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments
Thanks for reading….